FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 25, 2014, 08:19:20 PM

Title: ~ அன்னாசிபழ மருத்துவம்:- ~
Post by: MysteRy on July 25, 2014, 08:19:20 PM
அன்னாசிபழ மருத்துவம்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10524009_769969973025320_8710145284580556177_n.jpg)


அன்னாசிப் பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் என்பது மூட நம்பிக்கை. மாம்பழம். ஆரஞ்சு பழம் இவற்றில் உள்ள அதே வெப்ப அளவான 14 கலோரியே அன்னாசியிலும் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 82 கலோரி ஆகும். அன்னாசிப்பழம் குணப்படுத்தும் முக்கிய நோய்கள் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவிதமான காது நோய்கள், எல்லாவிதமான பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை. தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்துச் செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களை விரைவில் குணப்படுத்தும். மஞ்சட்காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. 20 கிராம் எடையுள்ள அன்னாசிப் பழத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள் வைட்டமின் ஏ-17 மி.கி. இரும்புச்சத்து 0.3 கி. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி சிறந்த டானிக். பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவை நீக்குவதில் அன்னாசி சிறந்ததாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். இரத்தத்தைச் சுத்தி செய்வது. சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு. தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை உண்பவர்கள் தேகத்தில் ஆரோக்கியமான பளபளப்பு ஏற்படும். தீராத கோடை தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு