FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on July 23, 2014, 06:12:27 PM

Title: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: Maran on July 23, 2014, 06:12:27 PM



நிசப்தம் கலைக்கும்
ஓயாத சுவர்க்கோழி,
தவளைச் சத்தம்,
மின்சாரமற்ற காரிருள்,
தேநீர்க்கோப்பையோடொரு அந்தகாரம்!


மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.

என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல,
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.

ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்

குப்பையாய்

கூட்டி அள்ளிய சொற்கூட்டம் !

இலக்கியங்கள்

வல்லின மெல்லினங்கள்

யாப்பு தொகை தொடையென்று

கண்சிமிட்டியபடி

விளங்காமலே விழிக்கிறேன் !



இப்போதெல்லாம்

உதட்டில் விஷம்!!



எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.

சிரிக்க வலுவற்ற மனம்
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.

‘நான் யார்’
நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!!!



Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: Maran on December 18, 2016, 09:04:54 PM



நினைவின்
பேரிறைச்சலில்
நிசப்தம்
நடுங்கிப் போகிறது!!




Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: BlazinG BeautY on December 20, 2016, 07:47:06 PM
ஹாய் மாறன். அழகான வரிகள் .. நிறைய தரம் படித்தேன் ..நிறைய விஷயங்கள் அதனுள்.. நான் இப்பத்தான் குழந்தை ..
Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: Maran on December 21, 2016, 12:18:17 PM




நன்றி தோழி...  :)




Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: SarithaN on December 29, 2016, 08:10:25 PM
தோழா மாறா வணக்கம்,

மானுக்குலத்தின் மேல்க்கொண்ட
அன்பு பரிவு எனும் ஆழமான பார்வையில்
உண்டாகி கிடக்கும் வலிகள் நிறைந்த
வாழ்க்கை கவிதையிது!

வரிகளில் புரிகிறது தோழா ஆழ்மனது.

எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

சிரிக்க வலுவற்ற மனம்
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.


வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி
Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: Maran on March 09, 2017, 07:59:42 PM




உங்கள் கருத்திற்கு மிக்க‌ நன்றி சரிதன் நண்பா. உங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன்.  :)




Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: SweeTie on March 16, 2017, 08:54:06 AM
அருமை  மாறன் ...வாழ்த்துக்கள்
Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: Maran on March 18, 2017, 11:41:09 PM




தங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி இனியா...  :)




Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: LoLiTa on March 22, 2017, 05:18:48 PM
வணக்கம் மாறன். நான் லைக் போட்ராபோ இக்கவிதையின் அர்த்தம் கொஞ்சம் புரிஞ்சது. திரும்பே நோட்டிபிகேஷன்ஸ் ல காட்ராபோ இன்னும் கொஞ்சம் புரிஞ்சது. அழகான வார்த்தைகள், காலை உணவு சுமந்து விற்கும் சிறுமி , கூட்டி அள்ளிய சொற்கூட்டம். வாழ்துக்கள் மாறன்.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.net%2Fpub%2F640%2F640251vlks7kqubt.gif&hash=5f2456136bed539c7df237787b50b55a681b3b0c) (http://www.glitter-graphics.com)nice kavidhai
Title: Re: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!
Post by: VipurThi on March 26, 2017, 01:06:13 AM
Maran anna kavipayanam thodara vazhthukkal:)