FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 22, 2014, 07:32:46 PM

Title: ~ கழுகுகள் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on July 22, 2014, 07:32:46 PM
கழுகுகள் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/p526x296/10484521_644887812275348_3895247383743512446_n.jpg)


கழுகு (ஈகல்) என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (அக்சிபிட்றிடாஎ) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்ரை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடாநாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும்காணப்படுகின்றன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது.

கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, [கங்கு], [கங்கம்], [கூளி], [பருந்து], [பணவை], [பாறு], [பூகம்], [வல்லூறு] என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.

கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண்கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.

இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லர் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.

இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (பர்ட்ஸ் ஆஃப் ப்ரே) என்று சொல்வதுண்டு.

இவை உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டுகின்றன. ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலை கொத்தி கொன்றுவிடும். இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அழிந்துவருகிறது.சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு.உலகில் சில நாடுகளில் கழுகுகளை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.1940க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது.காடுகளை அளித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர்.இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது.இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன.இது பாரிய பிர்ரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அழிந்துவருவதை தடுக்க முடியாதுள்ளது.