FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 22, 2014, 05:39:00 PM

Title: ~ தெரிஞ்சுக்கோங்க! ~
Post by: MysteRy on July 22, 2014, 05:39:00 PM
தெரிஞ்சுக்கோங்க!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1405418786.jpeg&hash=cc54529d09d251f4a13be3570a30a20d0932e15b)

* எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங் களுக்கு, பச்சைமிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.

*ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் மணம் கூடும்.

* உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சீக்கிரமாக வெந்து விடும்.

*நெருப்புப் பட்டு விட்டால் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசவும். எரியாது; கொப்பளிக்காது.

* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

* எந்தப் பொருளையும் வெயிலில் காய வைத்து எடுப்பது சுகாதாரத்துக்கு நல்லது. சூரிய கதிர்கள் பட்டு கிருமிகள் அழிந்து விடும்.