உலகம் புகழும் பொன்மொழிகள்...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p526x296/10488341_644512002312929_2934520365545736588_n.jpg?oh=cc5c38b4efa33a3261950887aea4c42d&oe=54569087&__gda__=1413096119_be7491cf8aa535d19b8a924ebf83314a)
* ஆலோசனையைக் கேள். ஆனால், உன் சுய புத்தியைப் பயன்படுத்து. -இஸ்ரேல்
* ஆலயத்தை வலம் வரும் அத்தனை பேரும் தெய்வீக ஞானிகள் இல்லை. -பிரான்ஸ்
* ஆயிரம் சாட்சிகளுக்கு ஈடானது மனசாட்சி. -செக் குடியரசு
* ஆண்டவன் ஒரு கரத்தால் தண்டித்தாலும், மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறான்.
-இஸ்ரேல்
* ஆயிரம் உபதேசங்களைவிட ஒரு அனுபவம் நல்ல பாடம் கற்பிக்கும். -துருக்கி
* கடவுள் ஏழையை நேசிப்பார். ஆனால், அசுத்தமானவனை நேசிக்க மாட்டார். -ஸ்பெயின்
* நோய்கள் சேரும் துறைமுகம், முதுமை. -இங்கிலாந்து
* அடிமைபோல உழைத்து, அரசனைப்போல் சாப்பிடு. -அல்பேனியா
உலகம் புகழும் பொன்மொழிகள்:-
(https://scontent-b-pao.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/p235x350/10468653_660579984039464_7154021089048956091_n.jpg)
1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின்
நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ
3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்
4.மதி விதியை வெல்லும். - எமர்சன்
5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.
6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே
7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து
கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்
8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ
9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்
10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு.