FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 19, 2014, 04:37:08 PM
-
அம்மா ரெசிப்பி; பிரெட் கட்டிங்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F08%2Fndqyqy%2Fimages%2Fp25.jpg&hash=ffe690bf4260af1a80dd13a0601b1d5826758af8)
''நோய்வாய்ப்பட்டவங்களுக்குதான் பிரெட், என்னும் காலம் போய், இன்னிக்குப் பெரும்பாலான பிள்ளைகளுக்குப் பிடிச்சதே பிரெட்தான். அடிக்கடி பாஸ்ட்ஃபுட் கடைகளுக்குப் போகாம இருக்க, வீட்டிலேயே பிரெட்டில் வெரைட்டியா சமைச்சுத் தருவேன்.'' என்று சுவைபடப் பேசும் சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.நிலோபர் மீரான், கலர் பிரெட் கட்டிங் செய்யும் முறையைச் சொன்னார்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F08%2Fndqyqy%2Fimages%2Fp25a.jpg&hash=f818b63d081e0721bff848bdddca93d78f1b882a)
தேவையானவை:
பிரெட் பாக்கெட் - 1, தக்காளி, பெரிய வெங்காயம் - 50 கிராம், கேரட் - 1 (துருவிக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கப், உரித்த பட்டர் பீன்ஸ், பீன்ஸ் (சிறியதாக நறுக்கவும்) - தலா 25 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 5, பச்சைப் பட்டாணி, மிளகாய்தூள், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பிரெட் துண்டை நான்கு துண்டுகள் என அனைத்தையும் வெட்டிக்கொள்ளவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு முறுகலாகப் பொரித்து எடுக்கவும். சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பீன்ஸ், மல்லித்தழை, துருவிய கேரட், பச்சைப் பட்டாணி, பட்டர் பீன்ஸ் இஞ்சி - பூண்டு விழுது, முந்திரி பருப்பு அனைத்தையும் எண்ணெயில் வதக்கி, கடைசியில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். தொக்கு பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து, பொரித்துவைத்த பிரெட் துண்டுகளைப் போட்டு லேசாகக் கிளறவும். கடைசியில் சிறிது மல்லித்தழை தூவி இறக்கவும். இப்போது சுவையான பிரட் கட்டிங் ரெடி.
சோபியா, டயட்டீஷியன்: கண்களைப் பாதுகாக்கும் பீட்டாகரோட்டின் கேரட்டில் இருக்கு. கால்சியம், பாஸ்பரஸ், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் இதன் மூலம் கிடைக்கிறது. எண்ணெய்க்கு பதிலாகப் புரதச்சத்து மிகுந்த நெய்யும், நார்ச்சத்துள்ள பிரெட்டும் சேர்ப்பதால், கூடுதல் சத்துக்கள் கிடைக்கும். பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு நல்ல பலம் தரும்.