FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 17, 2014, 12:30:26 PM

Title: இதழ் கள்...
Post by: aasaiajiith on July 17, 2014, 12:30:26 PM
என் மனதை மயக்கி
மடக்கி முடக்கி வைத்திருக்கும்
நின் ,மனம்கவர்
மூக்கின் நுனியே
ரசித்து எட்டி எட்டி பார்க்கும்
இரு குட்டி திருக்குறள்
உன் இதழ்கள்...

*******************************************************************************************************
மகத்தானது மனிதம்
மகத்துவமானது மனிதநேயம்
மறவாது மாறாது
மார்தட்டியே வந்தவன் நான் ..

மொத்தத்தையும் மறுதலித்து
மடியேந்தி மன்றாடுகின்றேன்
மனிதப்பிறவி முற்றிலும் நீங்கி
விரும்பும் வார்த்தைகளாய்
வரம் வாங்கி பெறுவதற்கே ....

முத்தமாகிட முடியாவிட்டாலும்
நித்தம்நித்தம் உன் வாய்மொழி
சத்தமாகிட முழு சித்தமடி

நின் பட்டு இதழ்களின் இடையே
பிட்டு பிட்டு வெளி எற்றபடினும்
பெரும் பாக்கியாம் என்பதனால் .

*************************************************************************************************************
நின் மொட்டு இதழ்களினையொற்ற
மென் இதழ்களினை கொண்ட
மொட்டு மலரினை கண்டதும்
நின் நாசி நுனி ஆசித்திட
கிட்டா சுவாசமதை சுவாசித்திட
மெல்ல பற்றாமல் ஒற்றி
நீ நுகர்ந்ததனால் தானோ
ரோசாவின் இதழ்களுக்கு
இம் மென்மையின் மேன்மை ?

**************************************************************************************************************
உலகின் எவ்வகை
வண்டினமும்
வந்தமரா வசீகர
மலரிதழ்கள்
நானறிந்தவரை
நின் மொட்டிதழ்களே !

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs2.postimg.org%2Fgdbdabh2d%2Flip2.jpg&hash=049ae236fe43459e3ec2f703b46f4058c07d58c2) (http://postimg.org/image/gdbdabh2d/)
Title: Re: இதழ் கள்...
Post by: Maran on July 17, 2014, 04:24:15 PM



என்னால முடியல கவிஞரே !!   :)



உங்கள் குறும்பு காதல் வரிகளை படிக்க !!!  :)



என்றென்றும் புன்னகைளோடு  :) நீங்கள் தொடர்ந்து எழுதிட வேண்டும்.  :)  :)



Title: Re: இதழ் கள்...
Post by: aasaiajiith on July 17, 2014, 04:38:18 PM
கவிஞன் என்கின்றீர் ...
சரி, கத்துக்குட்டி  எங்கே ?
விடுபட்டு போனதா ???

சேர்த்து கூறுங்கள்
"கத்துக்குட்டி கவிஞன் "என்று

வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கியமைக்கு
நன்றி !!
Title: Re: இதழ் கள்...
Post by: Maran on July 24, 2014, 09:27:39 PM





 :o கத்து குட்டி கவிஞனா !!! அதுவும் நீங்களா .....

பார்ற.... என்ன ஒரு தன்னடக்கம் ....  :)




Title: Re: இதழ் கள்...
Post by: sasikumarkpm on July 25, 2014, 04:39:49 PM
உலகின் எவ்வகை
வண்டினமும்
வந்தமரா வசீகர
மலரிதழ்கள்
நானறிந்தவரை
நின் மொட்டிதழ்களே !

======

வரிகளோட ஆழத்தை கருத்தில் வைக்கும் போது, எவ்வகை வண்டினமும்'னு, அப்படி பொதுப்படையா சொல்லிட முடியாது போலிருக்கே,  நிதம் கவியின் விழி வண்டுகள் மொட்டு மலரும் தருணம் வரை தண்னென இருந்து  அமுதருந்தி அமரனாயிருக்கும் போலிருக்கே..!!!   

சுந்தர வரிகளில் சுந்திரியின் மீதான வர்ணனைகள்.. அபாரமாயிருக்கிறது நண்பரே..

உங்கள் கவிரசத்தினை  இன்னும் அதிகமாய் பருக ஆவலாயிருக்கிறது..

எதிர்பார்ப்புகளுடன்
தோழன்
சசிகுமார்
Title: Re: இதழ் கள்...
Post by: aasaiajiith on July 26, 2014, 10:44:12 AM
அகர முதல அனைத்துமே
இதுவரை கற்பனையே
கன்னியவளை
கண்ணால் இதுவரை
கண்டதுமில்லை
நம்புவோர் நம்புங்கள் !!

வரிகளை
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்குமைக்கு
நன்றி !!