FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 14, 2014, 08:28:33 PM

Title: ~ பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on July 14, 2014, 08:28:33 PM
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - இய‌ற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/p235x350/10485883_764964136859237_9144267088496085969_n.jpg)


* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.

* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.

* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.

* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.