FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: MysteRy on July 08, 2014, 07:48:11 PM

Title: ~ சிரி... சிரி... !!! ~
Post by: MysteRy on July 08, 2014, 07:48:11 PM
சிரி... சிரி... !!!

(https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xfp1/t1.0-9/10450372_517518708381187_8519922561332392094_n.jpg)

1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!

2. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!

3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?

4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!

5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?

6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!

7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க ,
நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?