FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Maran on July 02, 2014, 07:27:56 PM

Title: மன அழுத்தத்தை குறைக்கும் நறுமணங்கள்
Post by: Maran on July 02, 2014, 07:27:56 PM
சிலர் எப்போதும் ஒருவித டென்சனுடனே காணப்படுவர். இந்த டென்சனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்வார்கள்.

சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள்.


காபி

உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.


சிட்ரஸ்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.


யூகலிப்டஸ்

அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால் அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.


மல்லிகை

தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்க மாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.


ரோஜா

இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.


சந்தனம்

சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.


சாக்லேட்

சாக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தாலல்இ அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.


குங்குமப்பூ

மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.