FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 30, 2014, 11:53:27 PM
-
நான் சிந்தாமல் சிதறாமல்
தின்னும் சோற்றுப் பருக்கைகளை
இறைத்து இறைத்து
ஒரு குழந்தை சாப்பிடுவது
ஒரு கவிதை
வெள்ளி நாணயம் சிதறியது போல
சிரித்துக் கொண்டு திரிந்தவள்
தலை குனிந்து வெட்கப்படுகையில்
அதும் கவிதை
குழந்தை சிரிப்பதும் அழுவது
அழகான கவிதை
துள்ளி நடப்பதும் தொட்டு முகம் வருடுவதும்
இனிமையான கவிதை
சீவி முடித்து பெண்
சிங்காரித்து நின்றாலும் கவிதை
சேலை கலைந்தது காமம்
சொட்ட நின்றாலும் அதும் கவிதை
பக்கத்தில் இருப்பதெல்லாம் கவிதை
பார்க்கும் இடத்தில்
கண்ணுக்கு தெரிவதில்லாம் கவிதை
-
:) உண்மைதான் நண்பரே சரியாகதான் சொல்லுகிறீர்கள்...
"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை."
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை