FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NasRiYa on June 30, 2014, 11:49:49 PM

Title: அன்பும் நட்பும் காதலும் என்றும்
Post by: NasRiYa on June 30, 2014, 11:49:49 PM
மனம் விட்டு பேசி மகிழ்ந்த அந்த நாள்
என்றும் என் மனதை விட்டு போகாது !
ஊரும் இன்றி உறவும் இன்றி
எங்கிருந்தோ வந்த சொந்தம் வந்த நாள்
எத்தனை உறவுகள் வந்த போதும்
அத்தனை அன்புக்கு உறவான நாள்
என்றும் எப்போதும் என்னை விட்டு நீங்காது
நாம் நடந்த பாதைகளை விட-உன்
தொலைவால் உன்னை பிரிந்தாலும்
மனதால் உன் அன்பும் நட்பும் காதலும் என்றும்
என்னை விலகாது ......கனவுகள் அழிந்தாலும் ......
Title: Re: அன்பும் நட்பும் காதலும் என்றும்
Post by: thamilan on June 30, 2014, 11:56:39 PM
நஸ்ரியா
என்னாச்சி உங்களுக்கு?
ரொம்ப பீலிங்க்ல இருக்கிங்க போல இருக்கு.
நல்ல கவிதை