FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 08:57:00 PM

Title: "கவி"யை மறந்த பின்
Post by: ஸ்ருதி on December 04, 2011, 08:57:00 PM
வேதனையின் விளிம்பில்
தோல்வியின் துயரத்தில்
உறவுகளின் பிரிவில்
உணர்ந்து கொண்டேன்
என் உண்மை நிலையை.

தொடரும் என்னை
விலகி செல்வதை
கண்ணார கண்டும்
தொடர்ந்தேன்.....

ஒவ்வொரு துயரிலும்
ஒரு பாடம்..
இறைவன் நமக்கு
அளிக்கும் வரம்....

இதுவரை இருந்த குழப்பம்
இன்று இல்லை..
என் மனதில் குழப்பம் இல்லை
என் மனதில் குற்றம் இல்லை
என்னை நானே அறிந்தேன்
என் உண்மை நிலை
நானே அறிந்தேன்.

கவிதை மறந்தேன்..
சந்தோஷத்தில் கவிதைகளை
மறந்தேன்...
"கவி"யை மறந்த பின்
என் "கவி" தான்
எனக்கு துணை
என் உண்மை நிலையை
நானே அறிந்தேன்....

நீண்ட மனபாரம்
தீர்ந்த உணர்வு...
என் உண்மை நிலை
நானே உணர்ந்தேன்

ஊமையாய் ஊனமான
என் உண்மை நிலையை
நானே அறிந்தேன்.... :( :( :(
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: Global Angel on December 04, 2011, 09:27:26 PM
நம்மை பற்றி நமக்கே தெரிந்தால் அது துன்பம் .... உணர்கிறேன் உன் கவிதையில்  :(
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: ஸ்ருதி on December 05, 2011, 06:32:27 AM
 :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: RemO on December 11, 2011, 07:23:52 PM
all izz well
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: ஸ்ருதி on December 13, 2011, 07:35:06 AM
nothing :( feel sad
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: KettavaN on December 13, 2011, 08:00:51 PM
நம்மை பற்றி நம்ம அறிந்தால் துன்பம் அப்போ நம்மள பற்றி அடுத்தவங்க அறிந்தால் இன்பமாம global
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: KettavaN on December 13, 2011, 08:02:38 PM
ஸ்ருதி கவிதை அருமை ஆனா ரொம்ப  ரொம்ப பெருசா இருக்கு ஒரு நாள் முழுவதும் படித்தல் தான் புரியும் போல என்னை மாதிரி மக்குகு
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: Global Angel on December 13, 2011, 10:21:45 PM
நம்ம பத்தி மத்தவங்களுக்கு நமக்கு முதலே தெரிஞ்சிடும்  
Title: Re: "கவி"யை மறந்த பின்
Post by: ஸ்ருதி on December 14, 2011, 05:49:34 AM
கெட்டவா ம்ம் இனி சிறுகவிதை எழுத முயற்சிக்கிறேன்
இருந்தாலும்  இப்படி கவிதைகளை பொறுமையாக படித்ததற்கு நன்றிகள்  ;) ;)