FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 30, 2014, 07:51:57 PM

Title: ~ மனச்சாட்சியே தெய்வம்... ~
Post by: MysteRy on June 30, 2014, 07:51:57 PM
மனச்சாட்சியே தெய்வம்...

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/s851x315/10301508_632804460150350_2492985309563576231_n.jpg)


* மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன், நன்மையும் ஏற்படும்.

* மனதில் இறைவனை நினைத்து அறிவு விளக்கேற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான எண்ணங்கள் புகுவதில்லை.

* குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.

* நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.

* மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.

* வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய் விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும். இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.