FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 30, 2014, 07:50:29 PM

Title: ~ நட்பு பற்றிய சிந்தனை துளிகள்... ~
Post by: MysteRy on June 30, 2014, 07:50:29 PM
நட்பு பற்றிய சிந்தனை துளிகள்...

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/p526x296/10313626_632901406807322_638758653830626301_n.jpg)


* நண்பர்கள் முலாம் பழத்தைப் போன்றவர்கள்.ஒரு நல்ல முலாம் பழத்தை சுவைக்க நூறு பழங்களை ருசி பார்க்க வேண்டியிருக்கும்.

* நட்பு இரு உடல்களில் உறையும் ஒரே ஆன்மா.

* நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.நட்பு கொண்டபின் அதில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்கவும்.

* மனிதன் மன மகிழ்ச்சி கொள்ளவும்,பெருமை கொள்ளவும் இறைவன் கொடுத்த வரம் 'நண்பர்கள்'.

* நம்மைப் பாராட்டுவதை விட நம்மிடம் அதிக அன்பு செலுத்தி,நமக்கு உதவுபவனே உண்மையான நண்பன்.

* பணத்தையும்,அதிகாரத்தையும்,செல்வாக்கையும்
அடித்துவிடக் கூடிய சமாசாரம் ஒன்று உண்டு.
அதுதான் உற்சாகம்.

* நண்பர்களைக் கூட்டு.பகைவர்களைக்கழி.
உற்சாகத்தைப் பெருக்கு.உன் கவலைகளை வகு.
கடவுளை மையமாக வைத்து
அன்பை ஆரமாக வைத்து
உன் வாழ்க்கை என்னும் வட்டத்தை வரை.