FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 08:54:10 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_9Z76XdB-6cg%2FS7t0auqIfPI%2FAAAAAAAAA-E%2FggomYFJ-FCM%2Fs1600%2Fsilence.jpg&hash=dc6dafa6c5b4877744c806b92f53f617bf4f0d4c)
என் கண்ணீரை துடைக்கும்
கரங்களாய் வர வேண்டாம்
ஆறுதல் மொழி பேச
என் அருகில் நீ வேண்டாம்
துக்கம் மறந்து தோள் சாயும்
தோள்களாய் வர வேண்டாம்
நெஞ்சை வதைக்கும்
நினைவுகளாய் வர வேண்டாம்
என் கல்லறையில்
உன் கால் தடம் பதித்து விட்டு போ
என் நேசத்தின் ஆயுள் நீளும்
பிரிந்த பின் என் பாசம்
உனக்கும் புரியும்.... :'(
-
காதல்கள் ஏனோ கல்லறைக்கு போகத்தான் கருத்தரிகின்றன போலும்..... நல்ல கவிதை சுருதி
-
காதலிக்கும் யாரும்
கல்லறை வாசம் செய்ய
விரும்புவதில்லை
கல்லறைக்கு செல்வதால்
காதல் என்றும் மரிப்பதில்லை
நன்றிகள் ரோஸ் ;) ;) ;)
-
kallaraikku ponaalum kaathal kaathal thaana
-
vazhum pothum vazhantha pinnum irupathu Kaathal matume :) :)