சாம்பல் இருவாச்சி பறவை பற்றிய தகவல்கள்:-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t1.0-9/10492230_629055540525242_7440322988527701446_n.jpg)
சாம்பல் இருவாச்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதனையொட்டிய தென்னிந்திய மலைப்பகுதிகளிலும் மட்டுமே காணப்படும் இருவாச்சிஇனத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் நீண்ட அலகினைக் கொண்டிருந்தாலும் மற்ற இருவாச்சிகளில் காணப்பபடும் அலகிற்கு மேலுள்ள புடைப்பு காணப்படுவதில்லை. இவை அடர்ந்த காடுகளிலும் அதனைச்சுற்றியுள்ள இரப்பர், பாக்குத் தோட்டங்களிலும் காணப்படுகின்றன. இப்பறவைகள் சிறு கூட்டமாக வாழும். பழங்களே இவற்றின் முதன்மையான உணவு. எளிதில் அடையாளங்கண்டுகொள்ளத் தக்கவகையில் இவை ஒலி எழுப்புகின்றன.