FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 23, 2014, 07:52:38 PM

Title: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:52:38 PM
சளி, இருமல் நீங்க:
திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்

செய்முறை:
இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:53:46 PM
உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:
இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி

செய்முறை:
இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:54:50 PM
வாயு மருந்து:
பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்

செய்முறை:
இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:56:00 PM
பித்தம் அதிகம் இருப்பின்:
இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,

செய்முறை:
இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:57:21 PM
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:
சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம்

செய்முறை:
இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 07:58:28 PM
விஷக்குடி மருந்து:
சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.

செய்முறை:
இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:04:29 PM
தலைவலி, தடுமல், தலைபாரம்:
தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:07:11 PM
பேதி குணமாக வழி:

 அவரை இலைச் சாறு, தயிறு

அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:08:02 PM
குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க:

எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம்

எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:09:11 PM
இரத்த வாந்தி நீங்க:

ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:10:30 PM
திக்குவாய் குணமாக:

வசம்பு பொடி, அருகம்புல் சாறு

இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:11:26 PM
மூல நோய் குணமாக:

பப்பாளி பழம், மாம்பழம்,தேன்

பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:12:18 PM
கைகால் வெடிப்பு நீங்க:

கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:13:04 PM
பல் உறுதியாக:

மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:14:10 PM
சுளுக்கு நீங்க வழி

உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:14:51 PM
இரத்தத்திலுள்ள பித்தம் குறைய:

ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:15:49 PM
இரத்தத்தை சுத்தப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:16:45 PM
மண்ணீரல் வீக்கத்தை குறைக்க:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:18:10 PM
உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:

கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:19:07 PM
கண் நோய்களை குணமாக்க:

பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:19:51 PM
காய்ச்சல் நீங்க:

துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:20:49 PM
சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க:

சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:21:46 PM
காயப்புண் நீங்க:

அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:22:31 PM
தீப்புண், தீக்காயம் நீங்க:

வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:23:21 PM
தலைவலி நீங்க:

அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:24:05 PM
பல்வலி நீங்க:

சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:25:12 PM
வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க:

வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை.

மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:27:06 PM
சளி கோலை, காது மந்தம் நீங்க:

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:27:47 PM
உடல் மெலிவு பெற:

பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:28:24 PM
உடல் தொப்பை குறைய:

சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:29:14 PM
கால் ஆணி குணமாக:

வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:30:33 PM
குடல் புண் குணமாக:

 தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:31:24 PM
மூலம்:

பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:33:03 PM
சர்க்கரை நோய் நீங்க:

பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:33:50 PM
மஞ்சள் காமாலை:

திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:34:40 PM
யானைகால் நோய் நீங்க:

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:35:23 PM
நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க:

அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:36:09 PM
வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க:

மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:37:33 PM
காது அடைப்பு, காது கட்டி நீங்க:

தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:38:14 PM
வாயுத் தொல்லை நீங்க:

பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது.
இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:39:00 PM
ஆஸ்துமா இருந்தால்:

வேப்பங் கொட்டை 3, திப்பிலி.

வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:39:45 PM
மஞ்சள்காமாலையாக இருப்பின்:

வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:40:50 PM
வாய்ப்புண்:

மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:41:38 PM
தீப்புண்:

சுண்ணாம்பை நீரில் கரைத்து  மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:42:31 PM
ஜலதோஷமாக இருப்பின்:

சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:43:41 PM
வாய்ப்புண்ணாக இருப்பின்:

மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம்

இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:45:08 PM
சளி தொல்லை:

காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது.

குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.

இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:46:24 PM
பித்தவாயு குர்ணி:

காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும்.

நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.

குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:47:13 PM
வயிற்றுப் புண்:

பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால்.

பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 23, 2014, 08:48:25 PM
தலைசுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி  சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:01:16 AM
இருமல் குணமாக:

அரச மரத்துப் பதட்டையை காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் ஒரு ரண்டி போட்டு கொதித்து வடிகட்டி சர்க்கரைப் பால் சேர்த்து குடிக்க இருமல் நிற்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:02:03 AM
ஜலதோஷம் குணமாக:

ஜலதோசம் காய்ச்சல், தலைவலிக்கு பன    ங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வரட்டு; இருமல் குறைய: கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:02:52 AM
மூச்சுத் திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யை விட்டு வதக்கி பால் உணவில் சாப்பிட்டால் மூச்சுத் திணறல் நிற்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:03:29 AM
சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடுதொடா சங்கன்இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிக்கட்டு நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:04:15 AM
பிரயாணத்தின் போது வாந்தி நிற்க:

தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:04:56 AM
நெஞ்சு சளி நீங்க:

தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:05:34 AM
தும்மல் நிற்க:

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:06:16 AM
காச நோய் குணமாக:

செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும்.
சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க: குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள  குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:07:23 AM
மூச்சுத்திணறல் குணமாக:

தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:08:00 AM
வாந்தி நிற்க:

வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:08:39 AM
ஒற்றைத் தலைவலி குணமாக:

துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:09:19 AM
மூக்கில் நீர் வடிதல்:

ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க: மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:10:03 AM
கண் எரிச்சல் நீங்க:

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:10:48 AM
கண்புரை குணமாக:

 நீக்கிய கீழாநல்லி இலை வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்களில் விட்டுவர கண்புரை குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:11:32 AM
மாலைக் கண் குணமாக:

கருத்துளசியின் இலையை கழுவி கசக்கி சாறெடுத்து கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை என ஒன்பது நாட்கள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:12:11 AM
குரல் மாற்றத்தை சரி செய்ய:

கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கி விடவும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:13:25 AM
விக்கல் குணமாக:

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:14:08 AM
தொண்டைப் புண் ஆற:

வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:14:55 AM
தொண்டை கரகரப்பு குணமாக:

சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:16:11 AM
வாய் நாற்றம் போக:

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதியாகும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாக: இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:16:56 AM
பல் ஆட்டம் நிற்க:

 வாழை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:17:34 AM
குரல் இனிமை பெற:

முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி; நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:18:20 AM
காது குடைச்சல் குணமாக:

ஊமைத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
காது அடைப்பை நீக்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:19:35 AM
காதில் சீழ் வடிதல் நீங்க:

நாயுறுவி செடி இலை இடித்து சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட சீழ்வடிதல் குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:20:25 AM
உடலில் உள்ள விஷம் இறங்க:

வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:21:08 AM
உடல் பருமன் குறைக்க:

பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:21:53 AM
வயிற்றுப் பூச்சிகள் ஒழிய:

பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும்.
சீதபேதி குணமாக: கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:22:34 AM
பசி உண்டாக:

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:23:24 AM
ஞாபகசக்தி வளர:

வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:24:03 AM
அலுப்பு தீர:

மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:24:43 AM
நல்ல தூக்கம் வர:

சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும்.
Title: Re: ~ கை மருத்துவம் ! ~
Post by: MysteRy on June 24, 2014, 11:25:26 AM
குளிர் காய்ச்சல் நீங்க:

நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும்.