FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on June 21, 2014, 08:16:45 PM
-
காதல் வலி கூடுதடி
பூத்திருக்கும் விழி இரண்டும்
நீர்க்குமிழி ஆனதடி
மாலை வண்ணம் மங்குதடி
மதி அழகு கூடுதடி
காக்கை குருவி மடையான் எல்லாம்
கண் உறங்கப் போகுதடி
காற்றும் வந்து போன தடம்
பார்த்து நின்றேன் காதலியே
நித்தம் நீ வரும் நேரம்
நிழலாய் நகர்ந்து போனதடி
சுகம்தானா கண்மணியே
நலம்தானா காதலியே
மனதில் ஏதேனும்
கலக்கம் கொண்டாயோ
நெஞ்சம் வாடுதடி
உன் வரவைத் தேடுதடி..
காலம் என்னும் சேற்றினிலே
கால் இரண்டும் சிக்கி நிற்க
பாவி இவன் ஆவி மட்டும்
உன் கூடு தேடிப் போகுதடி..
-
ம்ம்... continue பண்ணுங்கோ... software நண்பா ... காதல்னா அப்டிதான்...
மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே
மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்
நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே
உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு... :)
-
மிக்க நன்றி நண்பா !
-
காலம் என்னும் சேற்றினிலே
கால் இரண்டும் சிக்கி நிற்க
பாவி இவன் ஆவி மட்டும்
உன் கூடு தேடிப் போகுதடி.. ஆஹா அருமை ! காதலின் ஏக்கம் இனிய கவியோட்டத்துடன் ;D ;D ;D ;D ;D ;D
-
எல்லாம் உனக்காக தான் nasi