FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NasRiYa on June 21, 2014, 03:59:42 PM

Title: உன்னை விட்டால்.........
Post by: NasRiYa on June 21, 2014, 03:59:42 PM
உந்தன் நினைவுகள் எனக்கு எப்போதும்
நீ போவதென்றால் போய் விடு
ஆனால் உன்னை விட்டால்
வேறு யாரும் எனக்கு இல்லை
என்று மட்டும் நினைத்து விடாதே...
உன் ஞாபங்கள் என்றும்
வசந்தமாய்......
அது போதும் எனக்கு..
Title: Re: உன்னை விட்டால்.........
Post by: Maran on June 21, 2014, 06:00:17 PM


சங்ககால புறநானுற்று பாடல் படிக்கும் பழக்கம் உண்டு போல தோழிக்கு !!!....

அருமையான! மிக எளிமையான!!  வரிகள்...


அழகான காதல் கவிதை ...



அருமையான புறநானூற்றுப் பாடல்!

சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

Title: Re: உன்னை விட்டால்.........
Post by: Software on June 21, 2014, 08:11:56 PM
ரொம்ப அழகா அருமையா இருக்கு.
Title: Re: உன்னை விட்டால்.........
Post by: NasRiYa on June 22, 2014, 04:25:14 PM
மிக்க நன்றி Maran &Soft