FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 18, 2014, 08:30:04 PM

Title: ~ பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on June 18, 2014, 08:30:04 PM
பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10487383_749900138365637_5048792894494014857_n.jpg)


முடியை பாதுகாக்க...

* உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருது வாக இருக்கும்.

* வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரைமணி நேரம் ஊறிய பின், குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும், தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும்; பொடுகு நீங்கும்.

* கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி, தலையில் தேய்த்து வர, நரைமுடி குறையும்.