FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 14, 2014, 09:25:23 PM

Title: ~ கழுத்தறுத்தான் குருவிகள் பற்றிய தகவல்கள்;- ~
Post by: MysteRy on June 14, 2014, 09:25:23 PM
கழுத்தறுத்தான் குருவிகள் பற்றிய தகவல்கள்;-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t1.0-9/1005551_623668921063904_2250570629126389788_n.jpg)


கழுத்தறுத்தான் குருவி (White-cheeked Barbet) என்பது கன்னத்தில் வெள்ளை நிறத் திட்டு இருக்கும் ஒரு பச்சை நிறக் குருவி. இது தென்னிந்தியாவில் மேற்குமலைத்தொடர்ப் பகுதிகளில் காணப்படும் ஒரு பச்சைக் குருவி. இதன் உயிரியற் பெயர் மெகலைமா விரிடிசு (Megalaima viridis). இதன் உயிரியற் பெயரில் வரும் விரிடிசு (viridis) என்னும் சொல் பச்சை நிறத்தைக் குறிப்பதாகும். இக்கழுத்தறுத்தான் குருவி ஒருவாறு பச்சைக் குக்குறுவான் (என்னும் பச்சைக்குருவியுடன் தொடர்புடையது. கழுத்தறுத்தான் குருவியின் குயிலலும் (கூவலும்) பச்சைக் குக்குறுவான் குயிலலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும் (வலப்புறம் உள்ள ஒலிக்கோப்பைச் சொடுக்கிக் கேட்கவும்). கழுத்தறுத்தான் குருவி பெரும்பாலும் பழங்களை உண்டு வாழும் பறவை (பழவுண்ணிகள்) எனினும் சில நேரம் பூச்சிகளையும் உண்ணும். இவை மரப்பொந்துகளில் வாழ்கின்றன.