FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 13, 2014, 05:11:42 PM
-
என்னிரண்டு கண்களிலும்
கண்மணியாய் இருப்பவளே
அலுவலகத்தில்
பன்னிரண்டு மணிநேர அலுவல்
முடித்து வந்த அசதியிலும்
மணி பன்னிரண்டு தாண்டியும்
உன்னிரண்டு கண்கள் மூடி
ஓய்வாய் உறங்காது என்ன தான் செய்வாயோ ?
என,கேட்கும் என்னவளே !
என் எண்ணமெலாம் நிரப்பமாய்
நிறைந்திருக்கும் உனை நினைப்பேன்
உன் நினைவலைகளில் மூழ்கி
சுயநினைவிழந்து எனை மறப்பேன்
கண்கள் திறந்தே (கனவினில் )
நீ தூங்கும் அழகை ரசிப்பேன்
உன் அழகு நினைவுகளில்
இனிமையின் தனிமையில் வசிப்பேன்
கொட்டிடும் இனிமை கூட்டலில்
திகட்டல் தோன்றிடின்
கவிதை தளம் உள் நுழைந்து
கவிதை யாழ் வாசிப்பேன்
வாசிக்கும் வரிகளில் உனை விஞ்சா
இனிமை கொண்ட வரிகளை நேசிப்பேன்
இத்தனை இனிமைகள் புசித்தபின்னர்
மீதமேதும் இரவு இருந்திடின்
சின்னஞ்சிறியதாய் தூக்கம் ருசிப்பேன் ....