FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NasRiYa on June 10, 2014, 09:15:32 PM

Title: ஒரு துளி கண்ணீர்
Post by: NasRiYa on June 10, 2014, 09:15:32 PM
பிரிந்த காதல் சேராவிட்டாலும்
பதிந்த உன் நினைவுகள் ஒரு போதும்
மனசாட்சி இருந்தால் ஒரு முறை
என்னோடு இருந்த நாட்களை நினைத்து பார்
உன் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர்
விழுந்தாலும் என் காதல் புனிதமாகும்
Title: Re: ஒரு துளி கண்ணீர்
Post by: Maran on June 11, 2014, 09:20:58 PM

மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதோ !!!

ஒரு துளி கண்ணீர் !!  உணர்வின் ஓசை  !!..!


 வாழ்த்துகள் தோழி...   தொடர வேண்டும் நல்ல பதிவுகள் தோழி...!
Title: Re: ஒரு துளி கண்ணீர்
Post by: Software on June 12, 2014, 01:25:07 PM
வாவ் வாவ் ! காதல் புனிதமாவதும் புநிதமாகததும் நம் கையில் இருக்கிறது !
Title: Re: ஒரு துளி கண்ணீர்
Post by: NasRiYa on June 12, 2014, 07:36:17 PM
ஒரு துளி கண்ணீரை துடைப்பது காதல் அல்ல
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான்
உண்மயான காதல்  ;D

நன்றி மாறன்
Title: Re: ஒரு துளி கண்ணீர்
Post by: NasRiYa on June 12, 2014, 07:40:17 PM
நாளை என்பது நம் கையில் இல்லை அது
போல தான் காதலும்  :D :D :D :D :D

நன்றி Software