FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 02, 2011, 10:06:21 PM

Title: இந்திய ஒரு வல்லரசு நாடாக ......
Post by: Global Angel on December 02, 2011, 10:06:21 PM
இந்திய ஒரு வல்லரசு நாடாக ......  


நான் பிறந்த தேசம் இந்தியா நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொளுகிறோம், நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்திலிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செலுத்தப்படும் வரிபணத்தில் கட்டப்படும் மேம்பாலங்கள் கடற்கரை வீதிகள் பூங்காக்கள் சாலைகள், அரசு பேருந்துகள், என ஒவ்வொன்றும் உருவாக்கப்படுவது அவற்றை தினம் தினம் உபயோகிக்கும் ஒவ்வொரு மனிதனுக்காக. கடற்கரையோரத்தில் பல கோடிகள் செலவழித்து கட்டபட்டிருக்கும் அத்தனையும் பொதுமக்களின் உபயோகத்திற்கு.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளுகிறோம் , ஆனால் ஆட்ச்சியில் எந்த கட்ச்சியின் முதல்வர் பதவிக்கு வந்தாலும் ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்துவிட்டு போன கட்சி நாட்டிற்கு செய்துவிட்டு போன நல திட்டத்தையோ மேம்பாலங்களையோ தொழில்நுட்ப பூங்காக்களையோ சேதப்படுத்துவது பற்றி அவர்கள் அறிந்திராத விஷயம்,
அப்படி செய்வதால் நாட்டின் மக்களிடமிருந்து வசூலித்த வரிப்பணம் தான் வீணாகுமே தவிர ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்துவிட்டுச் சென்ற ஜனாதிபதியையோ அவரது கட்ச்சியையோ அவதூறு செய்து விட்டதாக முட்டாள்தனமாக அவர்கள் நினைப்பதே கிடையாது. இத்தகைய விவேகமற்ற செயல்களால் இந்தியாவின் பணம் கோடிகணக்கில் வீணாவது போல வேறே எந்த நாட்டிலும் வீணாக்கப் படமாட்டாது.

அப்படி அவர்கள் முட்டாள்தனமாக யோசித்து செயல்பட்டால் பொதுமக்களும் சட்டமும் அவர்களை சும்மாவிடாது. ஆனால் வல்லரசாக நினைக்கும் இந்திய நாட்டில் ஒரு கட்ச்சியின் ஆட்சி முடிந்து வேறு ஒரு கட்ச்சியின் ஆட்சி வந்து விட்டால் முதலில் பதவிக்கு வந்தவுடன் செயல் படுத்தும் விஷயம் ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்தவர்கள் செய்துவிட்டு போனவற்றை இடித்து தகர்த்து பெயர்த்து எடுப்பது, நல திட்டங்களை ரத்து செய்வது.

இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் அரசியல் பழி தீர்க்கும் படலம் முதலில் முடிவிற்கு வரவேண்டும், எந்த அரசு ஆட்ச்சிக்கு வந்தாலும் நடைமுறையிலிருக்கும் மக்களின் நல திட்டங்கள் ரத்து செய்வது என்ற முட்டாள்தனம் நடக்கக்கவிடாமல் கவனித்துக்கொள்ள மக்கள் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் புரட்ச்சி வெடிக்க வேண்டும். நடைபாதைகள் மேம்பாலங்களை இடிப்பது எந்த காரணத்திற்க்காக இருந்தாலும் பொதுமக்கள் அப்படி நடக்கவிடாமல் ஒன்று கூடி தடுக்க முன்வரவேண்டும். அரசியலில் காணப்படும் காழ்ப்புணர்ச்சியினால் நிச்சயம் இந்திய தேசத்தின் நலன் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

இதனால் கோடிகணக்கில் செலவழிக்கப்படும் பணம் வீணாக்கப்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது, நாம் கட்டிய சொந்த வீட்டை வேறு ஒருவர் உடைத்தாலோ சேதப்படுத்தினாலோ நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, ஆனால் பொது சொத்துக்கள் சூறையாடுவதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருந்து விடுகிறோம், சூறையாடப்படும் பொது சொத்தும் நம்முடைய பணத்தில் தான் உருவானது என்கிற எண்ணம் ஏன் நமக்கு ஏற்ப்படுவதில்லை. நாட்டின் குடிமக்கள் சுயநலவாதிகளாக இருந்தால் நாடு ஒருகாலமும் வல்லரசாக வாய்ப்பே இல்லை.