FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 05, 2014, 02:19:49 PM

Title: ~ கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்:- ~
Post by: MysteRy on June 05, 2014, 02:19:49 PM
கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10440961_742056345816683_1344241273467005211_n.jpg)


கோடையில் தகுந்த அளவு நீர் குடிக்க வேண்டும். கூடவே கீழ்க்கண்ட பழங்கள் உங்கள் கோடையை இனிமையாக்கி விடும்.

1. தர்பூசணி: நீர்சத்து அதிகம் கொண்டது. இதில் உள்ள `Lycopene' தோல் திசுக்களை சூரிய வெப்பத்திலிருந்து காக்கும்.

2. ஆரஞ்சு: பொதுவில் இது சதை இறுக்கம், பிடிப்புகளை நீக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து வெப்பத்தில் நாம் இழக்கும் பொட்டாசியத்தினை ஈடுகட்டும்.

3. லிச்சி (lychee) இந்த பழம் புரதம், வைட்டமின், இரும்பு, பாஸ்பரஸ், சத்துக்களை கொடுத்து கோடையை இழப்பில்லாமல் கடக்கச் செய்யம்.

4. அத்திப்பழம்: பொட்டாசியம் சத்து ஒன்று போதும். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாய் சோர்வடையாமல் காக்கும். இதனை பழுத்த பழமாகவோ (அ) உலர்ந்த பழத்தினை ஊற வைத்தோ சாப்பிடலாம்.

5. பளம்ஸ்: ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் `சி' சத்து கோடையில் ஏற்படும் தொற்று வியாதிகளை தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கும்.

6. பப்பாய்: இதில் உள்ள கைபோபபைன் மற்றும் பபைன் என்ஸைம்கள் ஜீரண சக்தியினை கூட்டும்.

7. நெல்லி: இதன் தாகம் தணிக்கும் தன்னையினை அனைவரும் அரிவர். இதன் வைட்டமின் `சி' சத்தினையும் அரிவர். இது பாஸ்பரஸ், இரும்பு, கால்ஷியம் சத்துக்களையும் கொண்டது.

8. வாழைப்பழம்: இதனை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். இது இறைவன் கொடுத்த வரம். இதன் இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்து நாள் முழுவதும் உங்களை சக்தியோடு இயங்கச் செய்யும்.

9. எலுமிச்சை: இதன் சாறுடன் தண்ணீர், சிறிது உப்பு, சிறிது சர்க்கரை கலந்து குடிக்க தாகம் ஓடி விடும். சருமம் ஆரோக்கியம் கூடும்.

10. மாம்பழம்: பழங்களின் அரசன். செலினியம் மற்றும் இரும்பு சத்து கொண்டது.

11. அண்ணாசி: இதில் உள்ள ப்ரோமிலியன் என்ஸைம் கொழுப்பு மற்றும் புரத சத்து செரிக்க உதவும். வீக்கங்களை குறைக்கும். இருதயத்திற்கு உகந்தது.