FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 02, 2011, 10:02:33 PM

Title: வேண்டும்
Post by: Global Angel on December 02, 2011, 10:02:33 PM
வேண்டும்

இனியொரு பிறவி
பிறப்பேனோ மாட்டேனோ நானறியேன்
பிறந்திருக்கும் இப்பிறவியிலே
நடக்காது முடியாது என்றெல்லாம்
பல உண்டு
வேண்டுமென்றும் வேண்டாமென்றும்
பல உண்டு

வேண்டுமென்ற காரியங்கள்
ஏராளமாய் கிடக்க
வேண்டாமென்ற நிகழ்வுகள்
எண்ணிக்கையற்றிருக்க
பட்டியலிட்டுத்தான் பார்ப்போமே
என்றெண்ணி இங்கே கிறுக்கி
நான் கிறுக்குகிறேன்

இமையத்தின் மீதேறி
கடும்குளிரில் திங்கள் பல
வாழவேண்டும் அங்கே இரவினிலே
முழு நிலவினிலே ஊஞ்சல்
கட்டி ஆட வேண்டும்

அடர்ந்த காடுகளிலும் இடையே
காணும் மரமடர்ந்த மலைகளினூடே
நீண்ட காலம் தன்னந்தனியே
சுற்றித்திரிய வேண்டும்

அலையோசையில்லா நடு
கடலில் நான் மட்டும்
தனியே முழு நிலவினிலே
படகினிலே யாத்திரை
செல்ல வேண்டும்

ரக்கையின்றி காற்றினிலே
மேகக்கூட்டத்தின் இடை
புகுந்து பறந்து
செல்ல வேண்டும்

காற்றோடும் புயலோடும்
ஊர் ஊராய் அடித்துச்
செல்ல வேண்டும் முடிந்தால்
காற்றின் முடிவும் முதலும்
கண்டறிய வேண்டும்

மலையின் மீதிருந்து
பூவைப்போல் கொட்டும் நீரினிலே
மீனாய் தவழ வேண்டும்

இறந்தோரின் மூச்சுக்
காற்றை குப்பியில் பிடித்து
மூடி வைக்க வேண்டும்

மனிதர் யாரும் மரிக்காமல்
முதுமை தவிர்க்க மூலிகை
செய்யவேண்டும்

நோயுற்ற உடலினுள் புகுந்து
தீரா நோயகற்ற வேண்டும்

பிரசவமே இல்லாத பெண்கள்
உருவாக்க வேண்டும்

சமயலில்லா உணவு
முறை உலகு முழுதும்
வேண்டும்

பணம் காசு நகை வீடு செல்வம்
சொத்து சுகம் ஜாதிமதம்
மொழி இனம் நிறம் அரசியல்
ஏற்றத் தாழ்வு இல்லா
உலகு உருவாக்க வேண்டும்

கடவுளைக் கண்டு
கையுடன் இங்கே
அழைத்து வர வேண்டும்

மந்திரத்தால் அல்ல சித்து
வேலையினாலுமல்ல
நானே நானாகி
இன்னும் பல


padithathi  pidithathu  ;)
செய்ய வேண்டும்
 
Title: Re: வேண்டும்
Post by: ஸ்ருதி on December 03, 2011, 07:23:26 AM

இறந்தோரின் மூச்சுக்
காற்றை குப்பியில் பிடித்து
மூடி வைக்க வேண்டும்



இது நல்லா இருக்கே  ;) ;) ;)
Title: Re: வேண்டும்
Post by: Global Angel on December 03, 2011, 09:44:19 PM
நடக்க முடியாதது ஆனா ஆசைக்குத்தான் அளவு வரைமுறை இலையே  
Title: Re: வேண்டும்
Post by: RemO on December 11, 2011, 09:00:25 PM
nadakathunu theruncha pala aasaikal iruku elorukum
enakunu oru karpanai ulagam anga antha aasaikalai nan niravetrikolkiren  :D :D :D