FTC Forum

General Category => வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES => Topic started by: MysteRy on June 05, 2014, 11:57:05 AM

Title: ~ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு ~
Post by: MysteRy on June 05, 2014, 11:57:05 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-ivA-Li_epTA%2FUJuyp9ghqqI%2FAAAAAAAAFgQ%2FZjdZ_Bos8R8%2Fs1600%2Ftamil%2Bnadu-tnpsc-logo.jpg&hash=e08cef58c7e85f9f67dfc6788ccfb0a347483647)


தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 14.06.2014 அன்று முற்பகல், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு, 2342 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 9.95 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in (http://www.tnpsc.gov.in) ல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி அதன் விவரம் மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான [email protected] க்கு, 23.05.2014 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரரின் பெயர்
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID)
விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்)
கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி
வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி:
மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமே. விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.