FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 02, 2011, 10:01:43 PM
-
குக்கர் பொங்கல்
தைத்திருநாளாம்
பொங்கல் என்றாலே
புது மண்பானை புது
அரிசி புது மஞ்சள்
உழவர் மக்கள்
பானையிலே பொங்கிவரும்
புத்தரிசி பொங்கலிட்டு
சூரியனை வணங்கி
இயற்க்கைக்கு நன்றி சொல்வர்
அடுக்குமாடி பொங்கல்
என்றால் குக்கரிலே
பச்சரிசி பாசிபருப்பும்
வெந்தெடுத்த பின்னே
நீரோடு வெல்லப்பொடி
சூடேற்றி பின்
முந்திரியும் உலர்பழமும்
நெய்யிட்டு வறுத்தெடுத்து
மூன்றையும் ஒன்று சேர்த்து
சுடச் சுட
பரிமாறி உண்ணும்போது
தொலைகாட்சிப்பெட்டியிலே
பட்டிமன்ற நகைச்சுவை பருகி
பொங்கலோ பொங்கலென்று
பொங்கல் தின சிறப்பு
நிகழ்ச்சி கண்டு குதூகலித்து
இடையிடையே
அடுத்தவேளை உணவுச்
செய்ய சமயலறைக்கும்
தொலைகாட்ச்சிப்பெட்டிக்கும்
ஓடி ஓடி சதமெடுத்து
கிரிகெட் ஆட்டக்காரர்
தோற்றுப் போவார்
இதுதானே எங்கள் பொங்கல்
rasithathu ;)
-
நிஜம் தான்
பண்டிகை என்றாலே தொ(ல்)லைகாட்சி பெட்டி தான்...
பொங்கல் என்றால் கிராமத்துல தான் நல்லா படியா கொண்டாடுவாங்க..
இங்க எல்லாம் குக்கர் கூவும்..
;) ;) ;)
-
ha ha its true apple
ipalam apadi than iruku