FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 02, 2011, 08:39:05 PM
-
கண்ணீரில் ஒரு கவிதை
முதலாய் இங்கே..
உரிமை இல்லா உன்னிடம்
உரிமை கொள்ள நினைத்தேனோ
உள்ளம் உடைந்து போகிறேன்
அதிக பாசம்
அநாதையாக்கும் அறிந்தும்
பாசத்தை வைத்து
பரிதவிக்கும் உள்ளம்,,,
கைபேசி ஒலித்தால்
உன் அழைப்போ என
என் மனம் செல்ல
ஏமாற்றம் வந்து
கவ்விக்கொள்ள
சோர்ந்த முகத்தோடு
கைபேசியை அணைத்தே
பல இரவுகள் செல்லும்...
குறுஞ்செய்தி பலவந்து
குவியும்...
உன் ஒரு செய்திக்காக
என் மனம் அலையும்...
என்னை தவிர்த்து
நீ இருக்க
உன்னை நினைத்து
நான் தவிக்க
என் மனம் நீ
அறிய வாய்ப்பில்லை...
முள்ளாய் குத்தும்
வார்த்தைகளை கூட
மௌனத்தால்
என் கண்ணீரில் நானே
அழித்துக் கொண்டு
மீண்டும் உன்னை நாடியே
என் மனம் வர
என்னை பார்த்தும் பாராமல் நீ,...
அழவைத்து பார்க்கும்
உறவுகளுக்குள்
உன் அருகாமையால்
உள்ளம் மகிழ்ந்தவள்
இன்று உன் அருகாமை வரம்
வேண்டி காத்திருக்கிறேன்...
-
முள்ளாய் குத்தும்
வார்த்தைகளை கூட
மௌனத்தால்
என் கண்ணீரில் நானே
அழித்துக் கொண்டு
மீண்டும் உன்னை நாடியே
என் மனம் வர
என்னை பார்த்தும் பாராமல் நீ,...
காதல் கொண்டால் இப்படிதான் போல ... நன்று ஸ்ருதி கவிதை
-
ஆமாம்...திரும்ப கிடைக்காத பாசத்துக்காக ஏங்குபவர்களின் நிலை தான் இது
-
ithu kaathal ku matum ila
pirintha uravukku kuda porunthum
-
Nandrigal Remo...
Pirivai unartha sila kavithaigalum varigalum thevai padukindrathu
athu verum kathaluku matum alla...ella vithamana uravugalukum poruthunthum