FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on December 02, 2011, 04:52:46 PM

Title: உலகின் மிகப் பெரிய அக்வேரியம்
Post by: ஸ்ருதி on December 02, 2011, 04:52:46 PM
நீர் வாழ் உயிரினங்களின் அருங் காட்சிச் சாலையினை ஆங்கிலத்தில் அக்வேரியம் (Aquarium) என அழைக் கிறோம். உலகிலேயே மிகப் பெரிய அக்@வரியம் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா என்னும் நகரில் உள்ளது. இதனைக் காண http://www.wonderfulinfo.com/amazing/georgia_aquarium/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
இந்த நீர் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் 85 லட்சம் காலன் நீரில், 500க்கும் மேற்பட்ட உயிர்வகை இனங்களில், 1,20,000க்கும் மேற்பட்ட நீர் வாழ் விலங்குகளைக் காணலாம். இது நவம்பர் 2005ல் மக்களுக்குத் திறக்கப்பட்டது. உலகிலேயே நீர்வாழ் இனங்களைக் காண அமைக்கப்பட்ட ஜன்னல்களில், இங்கு உள்ள ஜன்னல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் உயரம் 23 அடி. அகலம் 61 அடி. இரண்டடி தடிமன் உடைய கண்ணாடி ஜன்னலைக் கொண்டது. இதன் முன் நின்று ஆயிரக்கணக்கான நீர் வாழ் இனங்களைக் காண்பது ஓர் அரிய அனுபவம். நேரடியாக அட்லாண்டா செல்ல முடியாவிட்டாலும், இணைய தளம் சென்று இதனைக் காணலாம்.
Title: Re: உலகின் மிகப் பெரிய அக்வேரியம்
Post by: Global Angel on December 02, 2011, 08:47:27 PM
யம்மா எம்மாம் பெரிய மீனு ..... ம்ம் அமெரிக்க போன பாக்கணும் இத ..