FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 21, 2014, 05:28:28 PM

Title: ~ சில இலைகளின் மருத்துவ குணங்கள்:- ~
Post by: MysteRy on May 21, 2014, 05:28:28 PM
சில இலைகளின் மருத்துவ குணங்கள்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/s403x403/10366258_733969119958739_5056137089088919876_n.jpg)


வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது