இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-frc3/t1.0-9/10363320_731017540253897_7027641888373870486_n.jpg)
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10402992_736894039666247_173225373640687325_n.jpg)
முகச்சுருக்கம் : முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும்.
முகம் அழகுபெற : துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு
குளித்துவரவும்.
உடல் மினுமினுக்க : நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல்
குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும்.
உடல் உஷ்ணத்தைக் குறைக்க : மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து
தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன்
விரைவில்.
கண்கள் குளிர்ச்சியடைய : வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.
படர்தாமரை நீங்க : சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி,
ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும்.
வழுக்கை மறைந்து முடிவளர : அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து
வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.
நரைமுடி கருப்பாக : தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து
சாப்பிட்டு வரவும்.
முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய்
எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும்.
கூந்தல் மிருதுவாக : சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி
சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்.