FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: ஸ்ருதி on December 01, 2011, 12:41:22 PM

Title: What God Really Wants
Post by: ஸ்ருதி on December 01, 2011, 12:41:22 PM
Going to church every Sunday ............. ..


Going to Mosque every Friday ...............


Going to Temple every Saturday .......... ...


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_01.jpg&hash=2d6c1c87fcfe394658ec764f1dc76d9915021aeb)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freeimagehosting.net%2Fuploads%2Ff744afd8e3.gif&hash=b903929857f54d90e03d6d82c351f9577acb32b1)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_02.jpg&hash=6b9eb72e606e1aaf966c4e0a2eee059c9f9ee12a)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_03.jpg&hash=39525295c0ce165d2ae5d25f50237f3a7fcd406e)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_05.jpg&hash=aaf6bf390a7fe60e9e5093f9e3a6a64a4f747cf2)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_06.jpg&hash=c80d6f7d36422bb1115dd932576dae32316e8462)


"Helping Hands are better than Praying Lips"

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freeimagehosting.net%2Fuploads%2Ff744afd8e3.gif&hash=b903929857f54d90e03d6d82c351f9577acb32b1)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_04.jpg&hash=98019bc6001f5e1e12656154f391f9b5bea8d0fc)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_07.jpg&hash=eb899ff78a7769cb30c54d581f9ac51dae6f2567)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_08.jpg&hash=72b4c3ab983504ee7988a8a22be88499be2a8007)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_09.jpg&hash=671f98da3c77bb7c8547d42fb18ec8346dc87811)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fexcellentpix.com%2Ffiles%2Ffunzug%2Fimgs%2Finspirational%2Fwhat_god_wants_10.jpg%5B&hash=f389b02bd389cc2eeb1f4e4d764cb16b4388f752)/center]
Title: Re: What God Really Wants
Post by: Global Angel on December 01, 2011, 02:20:12 PM

இறைவன் எங்கும் சொல்லவில்லை தனக்கு அதை கொடு இதை கொடுன்னு ... மக்கள் தங்கள் திருப்திக்கு பண்றாங்க ... ஆனா அதை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தல் இடைவன் நன்மை நாடுவான் .
Title: Re: What God Really Wants
Post by: ஸ்ருதி on December 03, 2011, 07:37:28 AM
எனக்கு கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதில் நம்பிக்கை இல்லை ...
என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவள்

உதவி செய்தும் வருகிறேன்
இதில் வரும் திருப்தி உண்டியலில் பணம் போடுவதிலோ , 
முடி கொடுபதிலோ கிடைப்பதில்லை ;) ;) ;) ;)
Title: Re: What God Really Wants
Post by: gab on December 06, 2011, 11:33:14 PM
Ezhutharuvithavane iravanaavaan  & Ezhaiyin siripinil iraivanai kankiren enra palamozhiku erpa.. variyavargaluku  uthavuvathe iraivanudaiya anbai petru tharum enbathil iyamillai. Kalvi katrukol matravarukum katrukodu. Nice points Shruthi.
Title: Re: What God Really Wants
Post by: Yousuf on December 07, 2011, 01:23:03 PM
இதைத்தான் என்னுடைய பின்குரிப்பில் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்!

இறைவன் தேவையற்றவன்! என்பதை

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை பின் வரும் திருமறை குர்'ஆணின் வசனம் விளக்குகிறது!

''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், இறைவனின் பாதையில் நாடு துறந்தொருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22)

இதற்க்கு பலம் சேர்க்கும் வகையில் அகிலத்தாரின் அருட்கொடை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தர்மம் செய்வதை மிகவும் அதிகமாக வற்புறுத்தி கூறியுள்ளார்கள்.

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6539)

''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் ''நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.

 ''நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது. (அறிவிப்பவர்: அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1433, 1434)

''ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5352)

தர்மமே நமது சொத்து:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். ''அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6442 )

இஸ்லாம் தர்மத்தின் மூலம் தான் இறைவனின் திருப்தியை அடைய முடியும் என்பதை தெட்ட தெளிவாக கூறிவிட்டது. அந்த தர்மம் செய்யக்கூடிய பொருள் நேர்மையான சம்பாத்தியத்தால் ஈட்டப்பட்ட பொருளாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதைத்தான் நான் என்னுடைய வாழ்வில் பின்பற்றுகிறேன்!

இதை படிக்கும் அனைவருக்கும் இறைவன் நேர்வழியில் தர்மம் செய்ய அருள்புரிய வேண்டும்!

Title: Re: What God Really Wants
Post by: ஸ்ருதி on December 08, 2011, 10:31:10 PM
usf...correct....(F)
nandrigal