FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 10, 2014, 11:39:03 AM

Title: ~ புத்தர் சிந்தனைகள் :- ~
Post by: MysteRy on May 10, 2014, 11:39:03 AM
புத்தர் சிந்தனைகள் :-

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-prn1/t1.0-9/10302385_602481709849292_3815363097738984865_n.jpg)


* அடக்கமில்லாமல் நூறாண்டு வாழ்வதை காட்டிலும் ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வு சிறப்பானது.

* கோபத்தை அடக்கி மனம் என்னும் கடிவாளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

* கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.

* பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.

* மனதை அன்பு, அருளால் நிரப்புங்கள். பிறருக்கு உதவி செய்ய முயலுங்கள். ஆனால், தீமை செய்ய மனதாலும் நினைக்காதீர்கள்.

* அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.

* எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது.

* தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
Title: Re: ~ புத்தர் சிந்தனைகள் :- ~
Post by: MysteRy on May 29, 2014, 07:15:55 PM
புத்தர் சிந்தனைகள் :-

(https://scontent-b-kul.xx.fbcdn.net/hphotos-xfp1/l/t1.0-9/1908000_615252118572251_687663463438802315_n.jpg)


* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும்
துன்புறுத்தாதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது
உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.

* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன்
அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.

* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை
உன்னை சோதனைக்குள்ளாக்கும்.

* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின்
இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.