FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: ஸ்ருதி on December 01, 2011, 12:32:10 PM

Title: சும்மா சிரிங்க
Post by: ஸ்ருதி on December 01, 2011, 12:32:10 PM
    ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

    1. புது மனைவியாக இருக்கும்
    2. புது காராக இருக்கும்
    3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது.

    ********
    டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
    மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கனும் டாக்டர்..
    டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

    ********
    புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.
    கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
    வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

    ********

    மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
    கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!!

    *******
    மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்... எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
    கணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்...? நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!

    *******
    மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
    கணவன்: அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

    *******
    மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
    கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
    மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
    கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

Title: Re: சும்மா சிரிங்க
Post by: Global Angel on December 01, 2011, 09:20:16 PM
Quote
மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
    கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
    மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
    கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!


நான் நினைக்குறேன் இது imp யும் அவரு மனைவியும் போல
Title: Re: சும்மா சிரிங்க
Post by: ஸ்ருதி on December 03, 2011, 08:36:02 AM
அமைச்சர்: நான் ஊழல் பண்ணி வங்கி கொடுத்த டம்மி துப்பாக்கிய வச்சே தீவிரவாதிகளை பிடிச்சுட்டேங்களே! சபாஸ்
டி.ஐ.ஜி. அது ஒண்ணுமில்லை, கமிஷன் கிடைக்குதேன்னு அதை அவுங்ககிட்ட வித்துட்டேன். பாவம் அதை நம்பி ஆடு திருட போனஇடத்தில அம்புட்டுகிட்டாங்க சாரே!





"திடீருன்னு நம்ம நாட்டோட விலைவாசி இப்படி குறைஞ்சிருச்சே!"
"அதுவா! நேத்திலயிருந்து தீவிரவாதிகயெல்லாம் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்றதா அறிவிச்சாங்கள அதான்"


"எங்க ஊர்ல தீவிரவாதிகளைப் பிடிக்க 300 கோடி ஒதிக்கி தீர்மானம் போட்டாங்களே! உங்க ஊர்ல எப்படி?"
"தீவிரவாதிகளை சரணடையச் சொல்ல மொபைலுக்கு மிஸ்ட் கால் கொடுத்து காத்துகிட்டுயிருக்கோம்"


{தீவிரவாதக் கூட தலைவனிடம் போனில்....}
தீ.வா.1: ஹலோ, நான் ஓரே குண்டுல ஒம்பது கோடி ரூபாயை நாட்டுக்கு நட்டம்மக்கிட்டு தப்பிச்சு வந்துகிட்டுயிருக்கேன். ஓவர்.
தீ.வா.2: ஹலோ,நான் தான் அந்த குண்டை வச்சேன்னு போய் சொல்லி சரணடைஞ்சு. எனக்கு பாதுகாப்பு, பரிவர்த்தனை, கோர்ட்டு, கேஸ், வாய்தா, கருணை மனுன்னு கஜானாவை ஒரு வழிப் பண்ணிக்கிட்டுயிருக்கேன். ஓவர்.


பாதுகாப்பு ஆலோசகர்:நீங்க பாதுக்காப்புக்காக ஏதோ செக்யூரிட்டி சர்வீஸ்க்கு போன் பண்ணதை தீவிரவாதிங்க ஒட்டுக் கேட்டுட்டாங்க!
அமைச்சர்: நல்லவேளை தப்பிச்சேன்! நான் பாதுகாப்பு கேட்டதே அவுங்ககிட்டதான்.


"பாஸ்! எல்லா வண்டி, லாரியையும் செக் பண்ணி அனுப்புறாங்க, என்னால ஊருக்குள்ள போகமுடியலை."
"கவலைப் படாத ஒரு ருபாய் அரிசிய கடத்திக்கிட்டு ஒரு லாரி வரும் அதில லிப்ட் கேட்டு வந்திரு."


"தீவிரவாதிகளுக்கு அரசு இலவச வீடு கட்டித் தரணும்னு ஏன் கேட்குறீங்க?"
"அந்த வீடுகளெல்லாம் சீக்கிரமா இடுஞ்சு போயிரும்ல அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்"
Title: Re: சும்மா சிரிங்க
Post by: ஸ்ருதி on December 03, 2011, 08:36:28 AM
adipavi :D imp mela yen intha kolai veri
Title: Re: சும்மா சிரிங்க
Post by: fernando on December 06, 2011, 01:10:26 PM

Hi Suruthi,
sirichen, lovely jokes, appreciating your activities, ellarioom srika solluringa, entha fastest and mechanical works illa, kep it up.

yours,

S.Prabhat Fernando

S.Prabhat Fernando
Title: Re: சும்மா சிரிங்க
Post by: RemO on December 11, 2011, 06:18:28 PM
muthal part la pasangalam kalyanam panina pinadi padura avasthaikala sariya soninga nagaichuvaiyoda
2nd part la sirikuratha vida sinthika vendiyathu mukiyamnu thonuthu