FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 10, 2014, 10:17:08 AM

Title: ~ எரிநட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on May 10, 2014, 10:17:08 AM
எரிநட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/10359538_605672572863539_1884800831256253896_n.jpg)


இரவு வானத்தில் இயற்கை வானவேடிக்கை காட்டுபவை எரிநட்சத்திரங்கள் (Meteors). வானிலிருந்து பூமி நோக்கி பாயும் விண்கற்களுக்கும் இந்த எரிநட்சத்திரங்களுக்கும் நிறையவே வித்தியாசம். இரண்டும் வேறு வேறானவை.

வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும், அதை தூமகேது (Comets)என்று அழைப்பர். வால் நமது சூரிய குடும்பத்துக்கு உட்பட்ட ஓர் ஒளிரும் வாயு. சரியாக சொல்லப்போனால் அதுசூரியனைச் சுற்றியுள்ள ஒரு சுற்றுப்பாதையில் பாய்ந்து செல்லும் ஒளிரும் வாயுக்களாலான ஒரு பொருள். அதனுடைய சுற்றுப்பாதை சூரியன் அருகிலிருந்து ஆரம்பித்து மிகத்தொலைவிலுள்ள கிரகத்தையும் தாண்டி வான வெளியில் பில்லியன் கணக்கான மைல்கள் தொலைவுக்கு நீண்டு அமைந்திருக்கும். எனினும் அவ்வளவு தொலைவுக்குச் செல்லும் தூமகேது, பல ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ மீண்டும் வழியைக்கண்டுபிடித்து வந்து சூரியனைச் சுற்றிவிட்டு செல்கிறது.

இந்த தூமகேதுக்கள் அழியும்போது மிஞ்சுபவைதான் விண் கொள்ளிகள். ஒரு தூமகேது மடியும் போது அது விண்கொள்ளிகளின் கூட்டமாக மாறிவிடுகிறது.

விண் கொள்ளிகள் இரவு பகலாக பூமி மீது பொழிந்தபடி உள்ளன. எனினும் பகல் நேரத்தில் அவற்றைக் காணமுடியாது. ஒவ்வோர் 24 மணி நேரத்திலும் பூமி மீது ஐந்து முதல் பத்து மில்லியன் விண்கொள்ளிகள் விழுகின்றன. ஒவ்வொரு விண்கொள்ளிகளும் ஒரு குண்டூசியின் தலை அளவுக்கே உள்ளது.

பூமியிலிருந்து அவை சுமார் அறுபது மைல் உயரத்தில் இருக்கும்போது நமக்கு விண்கொள்ளிகள் தெரிகின்றன. மாபெரும் வேகத்தில் வரும் அவை,காற்றின் மீது பயங்கர ஆற்றலுடன் மோதுகின்றன, அப்படி மோதும் போது தீப்பிடித்து நிலத்தில் வந்து விழுவதற்கு முன்னரே அழிந்து விடுகின்றன.