FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 09, 2014, 01:22:28 PM

Title: ~ அம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம் ~
Post by: MysteRy on May 09, 2014, 01:22:28 PM
அம்மா ரெசிப்பி; ஆற்றல் தரும் சோள குழிப் பணியாரம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F05%2Fmtknjg%2Fimages%2Fp61a.jpg&hash=0534667df7188b7ed525323d11a8e52da859eee7)

''நான் படிச்சிட்டிருக்கிறப்ப, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விதவிதமா டிபன் கொண்டு வருவாங்க.ஆனா, என் அம்மா மதியம் அரிசி சாதத்துக்குப் பதிலா, சோளக் குழிப்பணியாரத்தை என் டிபன் பாக்ஸில் வைச்சு தருவாங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவேன். அன்னிக்கு அதில் என்ன சத்து இருக்குன்னு தெரியாது. ஆனா இப்போ நல்லாத் தெரியும். அதனால், இப்பவும் வாரத்துல ஒரு நாள் என் வீட்டில் இதுதான் டிபன். குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. தேவையான சத்துக்களும் முழுமையா கிடைச்சிடும்'' என்கிற கோவில்பட்டியை சேர்ந்த கீதா, சோளப் பணியாரம் செய்யும் முறையைக் கூறினார்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F05%2Fmtknjg%2Fimages%2Fp61.jpg&hash=c4718214da89a933723f2a0dc9494727213c43d7)

தேவையான பொருட்கள்:
வெள்ளை மணி சோளம் - 200 கிராம், உளுந்து - 50 கிராம், வெந்தயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 50 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் 5 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். இந்த மாவுடன், நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும். சுவையான சோள  குழிப் பணியாரம் ரெடி! இதற்கு, தொட்டுக்கொள்ள, வேர்க்கடலை சட்னி நன்றாக இருக்கும்.
ரமேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி: சோளத்தில் அதிக அளவு கொழுப்பு சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான உறுதியைத் தரும். பொட்டாசியமும் இதில் அதிகம். மேலும், வெந்தயம், உளுந்தில் இரும்புச் சத்தும், புரதமும் அதிகம் உள்ளது. அனைத்து வைட்டமினும் நிறைந்து உள்ளன. எலும்புக்கு வலு சேர்க்கும். பெருங்காயம் உடலில் வாயுப் பிரச்னையை சரிசெய்யும். தோல் நோய் உள்ளவர்கள் சோளத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.