FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on May 02, 2014, 12:03:50 PM

Title: ~ மே 1 - உழைப்பாளர் தினம் பொன்மொழிகள் :- ~
Post by: MysteRy on May 02, 2014, 12:03:50 PM
மே 1 - உழைப்பாளர் தினம் பொன்மொழிகள் :-

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-ash3/t1.0-9/10334450_601669416597188_7228358420756040181_n.jpg)


1. தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்


2. தமது உழைப்பின் மூலம் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. எனவே, ஒரு வழக்கறிஞர் வேலைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு ஒரு நாவிதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்


3. மனிதன் கட்டை வண்டி இழுக்கும்போது அவனுடைய கைகால்களின் தசைநார்களைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. - மு.வரதராசனார்


4. கெட்ட நெறிக்குச் சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். - அக்பர்


5. ஆராய்ச்சியின்றி உழைப்பவனுக்கு ஆண்டவன் அருள் சுரப்பான். - காந்தியடிகள்