FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 26, 2014, 05:20:13 PM
-
குடையோடு அவளும்
மழையோடு நானும்
வந்து கொண்டிருந்தோம்
கருணையாய் வந்த காற்று
பறித்துக் கொண்டது
நான் எதிர்பார்த்தது போல
அவள் குடையை
மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது எனதுடம்பு
ஆனந்தமாக அவளை தழுவும்
மழையைக் கண்டு
உடம்பை சிலிர்த்தன
சாலையோர மரங்கள்
தலைகுனிந்து நடந்தவள்
சற்றே தலைதூக்கி
ஓரக்கண்ணால் பார்த்து
மெலிதாக சிரித்ததும்
மின்னல் வெட்டியது என்மனதில்
ஈரமண் தரையில் பதிந்த
அவள் காலடிச் சுவடுகள்
மழைநீர் பட்டு அழிந்தாலும்
இன்னும் அழியாமல் இருக்கிறது
அவள் நினைவுச்சுவடுகள்
என் மனதில்