வேப்பம் பூ பருப்புப் பொடி-அம்மை நம்மை அணுகாது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-9lPSC91X7E4%2FU1i02OPsU9I%2FAAAAAAAAOX0%2F-ZlvEIBSIOo%2Fs1600%2F4444.jpg&hash=c6cb056598b3f1bbc78ad6eebf255b1edd1fc84a)
உலர்த்தி எடுத்த வேப்பம் பூ - 1 கப், பழுப்பு நிறமுள்ள வேப்பங்கொழுந்து (கிடைத்தால் சேர்க்கவும்) - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், தொலி உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன், மிளகு -
1 ஸ்பூன், நீள வற்றல் மிளகாய் - 2, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கல் உப்பு தேவைக்கேற்ப... இவை எல்லாவற்றையும் சேர்த்து வறுத்து அரைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பருப்புப் பொடி சாதம் சாப்பிடுவது போல கோடையில் சூடான கைக்குத்தல் அரிசி சோற்றிலோ, வரகு அரிசி சோற்றிலோ போட்டுச் சாப்பிடுவது வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை நிச்சயம் கொடுக்கும். இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய்-சீரகம் சேர்த்து வறுத்து, புளியோதரை சாதம் போல் கிளறி வேப்பம் பூ சாதம் செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கும் பிடிக்கும்!