வேப்பம் பூ ரசம்-அம்மை நம்மை அணுகாது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fav%2F2014%2F04%2Fmjcyod%2Fimages%2Fp48a.jpg&hash=dada0f27c284028942332eefca34763eaf311d22)
இயற்கையின் சீற்றங்களுக்குப் பெரும்பாலும் இயற்கையிலேயே தீர்வும் இருக்கும் என்பதற்குச் சான்று, கோடையில் பூக்கும் வேப்பம் பூ. நவீனம் ஏறக்குறைய மறந்தேபோய்விட்ட உணவு, வேப்பம் பூ ரசம். வேப்பம் பூவைச் சேகரித்து நிழலில் உலர்த்திக் காய வைத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்துக்கடை, அப்பளம்/வடாம் விற்கும் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும்!) சாதாரணமாக ரசப்பொடிக்குப் போடும், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த வேப்பம் பூவையும் சேர்த்து ரசம் வைத்து கோடையில் வாரம் மூன்று நாள் சாப்பிட்டால், அம்மை நம்மை அணுகாது.