FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on November 29, 2011, 07:32:09 AM
-
நான் ரசித்த கவிதை!
நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!
முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான்!
பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
-
நல்ல பதிவு
அருமையான வாசகங்கள்
-
naala karuththukal mams
valkaikku avasiyamanathu
-
நன்றி ரெமோ & ஸ்ருதி!