FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 22, 2014, 07:50:05 PM

Title: அன்பான எதிரி
Post by: thamilan on April 22, 2014, 07:50:05 PM
சொர்கத்தையும் நரகத்தையும்
பூமியில் நாம் சுவைக்கவே
இறைவன்
பெண்களை படைத்தான்

நாம் அவள் வழியாகவே
பிரவேசித்தோம்
அவள் வழியாகவே
வெளியேற வேண்டும்

அவள் பொருள் புரியாத
கவிதை
அதனால் தான்
அவளை புரட்டிப் புரட்டி
படிக்கிறோம்

அவள் தாயாகவும்
பரிபாலிக்கிறாள்
தாரமாகவும் பரிணாமிக்கிறாள்

நம்மை வசிகரித்து
நம் சிறகுகளை சுட்டெரிக்கும்
வினோத விளக்கு அவள்

அழகான ஆயுதங்களால்
நம்மை தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி அவள்

நாம் காணாமல் போவதும்
அவளிடமே
நம்மை கண்டெடுப்பதும்
அவளிடமே