பசு மீன்கள் பற்றிய தகவல்கள்:-
(https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-ash3/t1.0-9/10247317_597334447030685_4793243106701677952_n.jpg)
தலையில் இரண்டு கூர்மையான கொம்புகள் உள்ள இந்த வித்தியாசமான பிராணியைப் பாருங்கள். இது ஒரு மீன் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் இது பசு மீன். ஆமாம். பசுவிற்கு இருப்பதைப்போன்று இரண்டு கொம்புகள் உள்ளதுதான் இந்த மீனின் சிறப்புத் தன்மை. இதற்கு இப்படிப்பட்ட கொம்புகள் உள்ளதால் எதிரிகளால் இதை அவ்வளவு எளிதாக விழுங்க முடியாது. அது மட்டும் அல்ல, தன் மேல் தோலில் கடும் விஷத்தைக்கொண்ட மீன் இது. ஆயினும் மஞ்சள் நிறத்தில் நிறைய வெண்புள்ளிகள் உடைய இவற்றைத்தான் வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மீன் காட்சிச் சாலைகளில் மிகவும் அதிகமாக வளர்க்கிறார்கள்.