FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 21, 2014, 09:50:28 PM

Title: மதவா(வியா)திகள்
Post by: thamilan on April 21, 2014, 09:50:28 PM
தண்ணீர் தான் தாகத்தை தனிக்கும்
என்றான் தமிழன்
பானி தான தாகத்தை தனிக்கும்
என்றான் வடநாட்டான்
இல்லை இல்லை
வாட்டர் தான் தாகத்தை தனிக்கும்
என்றான் ஆங்கிலேயன்
மூவரும் அடித்துக்கொண்டு சாகிறார்கள்
தாகம் தணியாமலே
இது தான் இன்றைய மதவாதிகளின்
நிலமை

பொருள் ஒன்று தான்
பெயர் தான் வேறு
இறைவனை அறியாதவனே
இறைவனின் பெயரால் சண்டையிடுகிறான்
சண்டையிடுபவன் மதவாதியல்ல
மதம் பிடித்தவன்
வலையில் தண்ணீர் அகப்படாது
மதம் பிடித்தவரிடம் மகேசன் அகப்பட மாட்டான்

இறைவனை அறியாதவனே
சர்சைகள் செய்கிறான்
அறிந்தவன் மௌனமாகிவிடுகிறான்
பறக்கும் போது சப்தமிடும் வண்டு
பூவில் அமர்ந்து தேன் அருந்தும் போது
மௌனமாகி விடுகிறது

ஒருவன் பள்ளியை இடித்துவிட்டு
கோவில் கட்டுகிறான்
இன்னொருவன் கோவிலை இடித்துவிட்டு
ஆலயம் கட்டுகிறான்
இவர்கள் வழிபடுவது கட்டிடத்தை தான்
கடவுளை அல்ல

இதயமே இறைவனின் ஆலயம்
அந்த இதயத்தில் இறைவன் குடியிருந்தால்
பள்ளியிலும் கர்த்தரை வணங்கலாம்
கோவிலிலும் அல்லாவை தொழலாம்