FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 19, 2014, 07:06:01 PM
-
என்னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப்,
மைதா - 1/4 கப்,
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
பச்சரிசி மாவு - 1/4 கப்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
ஓமம் - 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துக் கலக்கவும். மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். (பிழியும் பதமாக மாவு இருக்க வேண்டும்). அறம் வடிவ அச்சில் கொஞ்ச கொஞ்சமாக போட்டுப் பிழிந்து பொரித்து எடுக்கவும். வடித்து விட்டு, ஸ்டோர் செய்யவும். இதை அதிகம் சூடான எண்ணெயில் பொரிக்கக் கூடாது.
பெருங்காயம், சீரகம், ஓமத்தை கடலை மாவுடன் சேர்ப்பதால் ஜீரணத்துக்கு நல்லது.