FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 18, 2014, 07:28:14 PM

Title: ~ Pacemaker ஐ தெரியுமா ? ~
Post by: MysteRy on April 18, 2014, 07:28:14 PM
Pacemaker ஐ தெரியுமா ?

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10171076_595383787225751_7318859756543329777_n.jpg)


இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு அதை சீராக்க இருதயத்திற்கு அருகில் (உடல் உள்ளேதான்) பொருத்தப்படும் ஒரு சிறிய மின்னனு கருவிதான் பேஸ் மேக்கர்

சுமார் நான்கிலிருந்து ஐந்து செண்டி மீட்டர் நீள்முள்ள இக்கருவி பேட்டரி மூலம் இயங்குகிறது. ஆரம்ப காலத்தில் அளவில் பெரியதாக இருந்த இதை உடலின் வெளிப்பாகத்தில் அமர்த்தி வயர் கனெக்‌ஷன்கள் இருதயத்திற்கு தரப்பட்டன.

நாளடைவில் அக்கருவி மேம்படுத்தப்பட்டு அளவில் சிறியதாகி உடலில் உட்புறத்தில் இருதயத்தின் அருகிலோ அல்லது வலது புற மார்பின் உட்புறத்திலோ பொருத்தப்படுகிறது

சுருங்க சொல்வதானால் திரைப்படங்களில் இதயதுடிப்பு நின்றவர்களை இரண்டு இஸ்திரிபெட்டி போல் உள்ளதை கொண்டு நெஞ்சின் மீது வைத்து “ஷாக்” கொடுப்பார்களே ! அதன் அடிப்படையில் இயங்கும் சிறிய கருவிதான் இது.

இதற்குள் இருக்கும் பேட்டரியை ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் அவ்வப்போது மாற்றிக்கொண்டு இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மிக சொற்பமாக இருந்த பேட்டரியின் வாழ்நாள் தற்போதைய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியினால் அதன் ஆயுட்காலம் அதிகரித்து இருப்பது இதை பொறுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதலான விஷயமாகும்.

ஆர்ன் லார்சன் (1915-2001) என்பவருக்குத்தான் முதன் முதலாக 1958 ஆம் ஆண்டில், ஒரு உட்பொருத்தக்கூடிய பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. அவருடைய வாழ்நாளில் அவருக்கு மொத்தம் 26 கருவிகள் பொறுத்தபட்டன. 2001 வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்த அவர் இதைப்பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தனது வாழ்நாளை செலவழித்தார் என்பது குறிப்பிடத்த்க்கது