FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 17, 2014, 10:46:03 PM

Title: சுயநலமிக்கது காதல்
Post by: thamilan on April 17, 2014, 10:46:03 PM
       
   _
காதல் சுயநலமிக்கது தான்
காதல் எதிர்பார்ப்புகள்
கொண்டது தான்
அதில் தவறு இல்லை

தன் காதலிப்பவரின் அன்பு
தனக்கே சொந்தம் என்று நினைப்பது
சுயநலமென்றால்\
அதுதான் உண்மையான
காதலும் கூட

தான் காதலிப்பவர் அன்பு
தனக்கே சொந்தமாக வேண்டும்
என்று நினைப்பது எதிர்பார்ப்பு
என்றால்
அது தான் உண்மையான
காதலும் கூட

தான் காதலிப்பவரை விட
இன்னொருவன் உயர்ந்தவன்
என்று நினிக்கும் போது அங்கே
அந்தக் காதல்
மரணித்து விடுகிறது

தான் காதலிப்பவரை விட
இன்னொருவருடன் அதிகம் பேச வேண்டும் என்று
நினைக்கும் போதே
அந்த காதலுக்கு
சாவுமணி அடிக்கப்படுகிறது

காதல் சுயநலமிக்கது தான்
அதற்குப் பெயர் தான் காதல்
சுயநலமற்ற பரந்தமனட்பான்மை
நட்பில் மட்டுமே வரலாம்
காதலில் இவை வந்தால்
அந்தக் காதல்
அசிங்கமாகி விடும்



Title: Re: சுயநலமிக்கது காதல்
Post by: NasRiYa on April 18, 2014, 10:05:44 PM
காதலில் அழகான இதயங்கள் கிடைப்பது முக்கியம் இல்லை
கிடைத்த உண்மையான இதயங்களோடு
உண்மையாகவும் அன்பாகவும்
வாழ்வதே ......உண்மையான காதலுக்கு அழகு.....
ஆமா தானே டாமல் வாழ்த்துக்கள்

Title: Re: சுயநலமிக்கது காதல்
Post by: vimal on May 17, 2014, 09:47:05 PM
அழகா சொல்லி இருக்கீங்க தமிழன்

காதலின் சுயநலத்தையும் (அன்பின் மிகுதி)

தன் காதலிப்பவரின் அன்பு
தனக்கே சொந்தம் என்று நினைப்பது
சுயநலமென்றால்\
அதுதான் உண்மையான
காதலும் கூட

காதலின் தாராளத்தையும் (அசிங்கத்தின் மிகுதி)

தான் காதலிப்பவரை விட
இன்னொருவருடன் அதிகம் பேச வேண்டும் என்று
நினைக்கும் போதே
அந்த காதலுக்கு
சாவுமணி அடிக்கப்படுகிறது