FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 17, 2014, 09:38:46 AM
-
தொப்பையை குறைக்கும் வொர்க் அவுட்ஸ்!
'டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில், எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்துவிடுவதால், வியர்வை சிந்தும் உடல் உழைப்பு குறைவாகிவருகிறது. விளைவு உடல் பருமன், தொப்பை. உரிய பயிற்சிகளும், ஒழுங்கான உணவுப் பழக்கமும் இருந்தால் தொப்பையை முழுமையாகக் குறைக்க முடியும். வயிற்றை உள்ளிழுத்துச் செய்யக்கூடிய எளிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது, தொப்பை வயிறும் ஒட்டிப்போகும்' என்கிறார் 'பிங்க் ஃபிட்னெஸ் சென்டர்’ உடற்பயிற்சியாளர் செண்பகாதேவி.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F05%2Fodunjh%2Fimages%2Fp20b.jpg&hash=d8d724b7e87a4643f2e5ee2cbc8bb475aed40c2a)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F05%2Fodunjh%2Fimages%2Fp20a.jpg&hash=fe67f7a086ff4a2662f844c506827032269fd806)
அப்ஸ் கர்ல் (Abs curl)
தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளை மடித்துவைக்க வேண்டும். கண்கள் மேல் நோக்கி இருக்கட்டும். கைகளைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்திவைக்கவும். இப்போது, மேல் உடலை உயர்த்தி, இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் தூக்கி, கால் மூட்டைத் தொட வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோன்று தொடர்ந்து 20 முறை செய்யவேண்டும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-LaE425Tm9qs%2FU05zX1uP24I%2FAAAAAAAAOWM%2FXEUIOsI0emE%2Fs1600%2F11111.jpg&hash=0da52ee236734f77b37a716a4561269345b91369)